மின் கட்டணம் செலுத்த முடியாத 7 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் நிறுத்தம்!

Monday, November 6th, 2023

மின் கட்டணம் செலுத்த முடியாத 788,235 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மின்கட்டணம் செலுத்துவது தற்போது சவாலான விடயமாக காணப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஆண்டு, அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவான மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த எண்ணிக்கை 120,474 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 118,481 பாவனையாளர்களின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 106,106 பாவனையாளர்களின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: