எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை – வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் ஏற்பாடு!

Friday, July 15th, 2022

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றுமுதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்படவுள்ளது.

இதற்கமைய மோட்டார் சைக்கிள்களுக்கு 6 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றரும் விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக 20 லீற்றரும் இன்று சுகாதார சேவையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணிக்குழாமினருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், கடந்த இரண்டு வாரங்கள் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குதல் தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உயர்நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: