காய்ச்சல் ஏற்பட்டால் இரத்த மாதிரி பரிசோதனையை மேற்கொள்ளவும் – சுகாதார பிரிவு

Tuesday, June 20th, 2017

டெங்கு வைரஸ்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சில டெங்கு நோயாளர்களின் இரத்த தட்டுக்களின் அளவு குறைதல் வேகமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வக நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் டெங்கு நோய் பரவியுள்ளதாக பரிசோதனை செய்யப்படும் இரத்த மாதிரி பரிசோதனையை உடனடியாக மேற்ககொள்ளுமாறு அந்த சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஸ் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதேவேளை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் டெங்கு நோய் குறித்த இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகள் சட்டத்தின் கீழ் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்படி இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணம் ரூபாய் 250 ஆகவும், டெங்கு நோய் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாவாகவும் காணப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Related posts: