சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது – புதியவர்கள் உள்வாங்கப்படுவர்!

Wednesday, August 16th, 2017

சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் கனணி மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த செயல்முறை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கணனி மூலமான சமுர்த்தி பயனாளிகளிடம் சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இது தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அல்ல என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் நாம் கொள்கை ரீதியில் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். இது வரையில் வழங்கபட்ட சமுர்த்தியாளர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது. மாறாக இதுவரை சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்கள் இருப்பார்களாயின் நாம் அவர்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: