முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் உத்தரவு!

Wednesday, November 27th, 2019

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ‘பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு முந்தைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்று குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு ஆணைக்குழுவை நிறுவவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர்களாக அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பதிரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, புதிய அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts: