உதய நகர் கிழக்கில் சிறார்கள் கசிப்பு விற்பனை – பாதுகாத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

Tuesday, May 7th, 2024


……
போதை பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்கள்  ஈடுபடுவதான முறைப்பாடு
கரைச்சி உதயநகர் கிழக்கு மற்றும் மேற்கு கிராம மக்களுக்கான  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற  குறைகேள் சந்திப்பில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இச் சந்திப்பில் வறிய குடும்பங்களுக்கு பதில் வேறு தொழில் வருமான வாய்ப்பை கொண்ட  வசதியான குடும்பங்களும் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாகவும்  மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதிக்கான அசுவெசும திட்டத்திற்குள் பொருத்தமற்ற பயனாளிகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் பயனாளிகள் பட்டியல் அலுவலகத்தில் தமிழில் காட்சிப்படுத்துவ தில்லை எனவும் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  வழங்கப்படும் வெவ்வேறு நிவாரண உதவிகள் குடும்ப பதிவு  அட்டையில் பதிவுக்குட்படுத்தாது வழங்கப்படுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் உதயநகர் கிழக்கு நாகதம்பிரான் வீதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலமைகள் அவ்வீதியை புனரமைப்பதன் அவசியமும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

கூடவே சில பகுதிகளுக்கான குழாய் மூல குடிநீர் வியோகத்துக்கான கோரிக்கையும் தாய்சேய் நிலையத்தை  நிர்மாணிப்பதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .

இச்சந்திப்பின் போது கட்சியின் குறித்த  பிரதேச உதவி அமைப்பாளர்  சுபாஷ் இரு கிராம சேவகர் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள், கரைச்சி  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அப்பகுதி வாழ் பொது மக்கள் என பலரும்   கலந்து கொண்டனர்.

Related posts: