மின்சாரம் வழங்குவது பிரச்சினையாகியுள்ளது – பிரதி அமைச்சர் அஜித் தெரிவிப்பு!

நுரைச்சோலை மின் நிலையத்திற்கு பின்னர், நாட்டில் முதன்மை மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமையால் மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்வலு பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செம்ரேம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சூரியசக்தி மூலம் 50 மெகாவார்ட் மின்சக்தியை தேசிய கூட்டமைப்புக்கு வழங்க முடிந்துள்ளது. நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகுமாயின் நாட்டுக்கு இருக்கும் ஒரே சிறந்த மாற்றுவழி சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றுவது ஆபத்தானதானது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
சீரற்ற காலநிலை - நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கடும் எச்சரிக்கை!
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!
|
|