மின்சாரக் கட்டணக் குறைப்பு – நடைமுறைப்படுத்தப்படும் திகதியை அறிவித்தது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!
Monday, July 1st, 2024
மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதியை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!
உடன் நடவடிக்கை எடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!
நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!
|
|
|


