விமானிகளை சோதனைக்கு உட்படுத்த இணக்கம்!

Sunday, September 11th, 2016

விமானிகளிடம் மூச்சு ஆய்வு சோதனையை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் எயார்லைன்ஸ் விமானிகள் பேரவையும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பயிற்றப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைகள், தளப்பாதுகாப்பு முகாமையாளரின் கண்காணிப்பில் விமானக்கட்டுப்பாட்டு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சோதனைகளின்போது விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக தெரியவந்தால், அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து மேலும் ஒரு மூச்சு ஆய்வு சோதனை மேற்கொள்ளப்படும். இது முதலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளது என்ற அடிப்படையிலேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும், விமானிகளின் பேரவையும் குறித்த நிபந்தனைகளில் உடன்பாடு கண்டுள்ளன. பிராங்போட்டில் இருந்து 2016ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று புறப்படவிருந்த விமானம் ஒன்று விமானி ஒருவரின் மதுபாவனை காரணமாக பல மணித்தியாலங்கள் தாமதமானமையை அடுத்தே இந்த சோதனை மேற்கொள்ளும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்டது.

2(4108)

Related posts:


தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந...
மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி - இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் ...
புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவ...