மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளருக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளரை இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருள்கள் கொள்வனவுகளுக்குரிய விவரங்களுடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டமை, மற்றும் பொருட்கள் கொள்வனவின் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டினை அடுத்தே விசாரணை நடத்தப்படுவதாக ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பதற்கே வழிகளைத் தேடுகின்றது. – ஈ.பிடி.பி வேட்பாள...
அடிக்கடி பெய்துவரும் மழையையடுத்து மீண்டும் டெங்கு தொற்றதிகம் - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரி...
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூ...
|
|