அடிக்கடி பெய்துவரும் மழையையடுத்து மீண்டும் டெங்கு தொற்றதிகம் – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை!

Monday, March 21st, 2022

நாடு முழுவதிலும் அடிக்கடி பெய்துவரும் மழையை தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து பொதுமக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையில் ஆறாயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுள் நான்காயிரத்து 522 பேர் ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளனர். இதனால், டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுற்றாடல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: