சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பதற்கே வழிகளைத் தேடுகின்றது. – ஈ.பிடி.பி வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020

சர்வதேச சமூகத்தின் மூலம் ராஜபக்ச அரசாங்கம் மீது  நெருக்குவாரத்தைக் கொடுத்து தீர்வைப் பெறுவோம் என்றும் தமிழ் அரசு கட்சியினர் சொல்வதை துல்லியமாகப் பார்த்தீர்களானால் இவர்கள் சொல்லுகின்ற பூகோள அரசியலின் இன்றைய நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் அறவே இல்லை என ரூடவ்ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்வதற்கே வழிகளைத் தேடுகின்றது. ஏனெனில் குறைந்தது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ராஜபக்ச ஆட்சியே இந்த நாட்டில் இருக்கப் போகின்றது. அவர்கள் அசுர பலத்தோடு இந்த நாட்டை ஆளப்போகின்றார்கள்.

முன்னைய காலங்களைப் போல ஆட்சி மாற்றத்துக்கான ஜனநாயகச் சதி எதிலும் உலகச் சக்திகள் இனி ஈடுபட மாட்டார்கள். இதுவரை எடுத்த மூன்று ஆட்சி மாற்ற முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டார்கள். மீண்டும் ராஜபக்ச ஆட்சி ஏகோபித்த மக்கள் ஆதரவோடு ஏற்படப் போகின்றது.

எனவே – இன்றைய ஆட்சியாளர்களைப் பதற்றத்துக்கோஇ சங்கடத்துக்கோ உட்படுத்தும் எதனையும் இந்தியாவோ அமெரிக்காவோ செய்யும் சாத்தியம் இல்லலை. இந்த ஆட்சியாளர்களுடன் சமரசமாக இணந்து வேலை செய்து தமது நலன்களைப்

பாதுகாக்கும் வழிகளையே அவர்கள் தேடுவார்களே அல்லாமல்இ தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் எதனையும் பிரயோகிக்க மாட்டார்கள்.

அத்தோடு – இன்றைய ஆட்சியாளர்களையும் பார்த்தீர்களானால் அனைத்து உலக வல்லரசுகளுடனும் மிகவும் நுட்பமாகத் தமது உறவுகளைச் சமமாகப் பேணுகின்றார்கள். யாருடனும் பகையை சம்பாதிக்கவில்லை.

எனவேதான் நான் சொல்லுகின்றேன்  சர்வதேச நாடுகள் மூலம் இலங்கை மீது அழுத்தம் போட்டு தமிழர் பிரச்சனையைத் தீர்ப்போம் என எந்த கட்சியாவது கூறினால்இ அது வெறுமனே தமிழ் மக்ளை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காகவே கூறுகின்றார்கள். இதில் முக்கிய விடயம்  என்னவெனில் – இவங்கையில் தமது நலன்களைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட தோழர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊடாக மட்டுமே ராஜபக்ச அரசாங்கம் தமிழர் தாயகத்தில் எந்த விடயத்தையும் செயற்படுத்தும் என்ற இந்த விடயம் மிக மிகத் தெளிவாகவே தெரியும். ஏன அவர் மேலும் தெவித்தார்.

Related posts: