கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் – இரானுவத் தளபதி !

Friday, April 10th, 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க 3496 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தனர். நேற்று அனுப்பப்பட்ட 37 பேரும் 21 நாட்கள் தனிமையில் இருந்து வெளியேறினர் . தற்போதும் 1340 பேர் 12 நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இறுதியாக வெளியேறிய 37 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை ஆராயும் ஆரம்பகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனியார் தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 16 பேர் அக்குறணையில சிலர் அட்டுலுகம, பேருவளை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்டவர்கள் இந்த 1340 பேரில் உள்ளனர் . அவர்களிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது அடையாளம் காணப்பட்டவர்களுடன் முதலாவது – இரண்டாவது – மூன்றாவது தொடர்பாளர்களாக 48 ஆயிரத்து மூன்று பேர் வரை இருக்கலாமென அறியப்பட்டாலும் நாங்கள் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டவர்களிடம் இருந்து பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்

அத்துடன்  அரிசி 25 ஆயிரம் மெற்றிக் தொன் அரசிடமும் 26 ஆயிரம் மெற்றிக் தொன் தனியார் ஆலைகளிடமும் தற்போது உள்ளன. அந்தவகையில் அரிசிக்கு தட்டுப்பாடு வராது. அத்தியாவசிய சேவைகள் கிரமமாக நடக்க ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது என இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனியார் தெரிவித்துள்ளார்.

Related posts: