மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை சிறந்த நிலையில் பேணுவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கும் ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கும் அதிகாரம்!

Wednesday, November 4th, 2020

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து சிறந்த நிலையில் பேணுவதற்கும் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்ளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முடிந்தளவு உயர் மட்டத்தில் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக  அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில்ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உலகின் பிரதானமான நாடுகள் கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சந்தர்ப்பத்திலும் கூட முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக் கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயத்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் அரசாங்கம் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பசில்ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சில பிரதேசங்களில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாகதரம் உறுதி செய்யப்பட்ட மீன்களை மக்களுக்கு விநியோகித்தல் தொடர்பிலும் இதன்போதுகவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் சமுர்த்திபயனாளர்களுக்கு இம்முறை சமுர்த்திகொடுப்பனவில் ரூபாய் 500 மதிப்புள்ள ஏற்றுமதிதரத்திலான பொதிசெய்யப்பட்ட மீன்களை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுப்பதற்கும் இதன்போதுதீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: