இனவாதத்தை தூண்டும் இணைதளங்களுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை!

Wednesday, December 14th, 2016

நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் குருத்தலாவையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது வானொலி மற்றும் தொகை;காட்சி ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்க எம்மால் முடிந்த போதிலும், இணையத்தளம் மற்றும் சமூக வலைதளங்களில் கூறும் விடயங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாதுள்ளது. சமூக வலைத்தளங்களில் எந்தவொரு கெட்ட வார்த்தைகளையும்  பொறுப்பேற்ற விடயங்களையும் இன்று வெளியிட முடியும். எனவே, இவர்களை அழைத்த தெளிவுபடுத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார். அவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்காக சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-1

Related posts:


உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தீர்வு - அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்ப...
கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் ப...