கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளமன்றில் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்,

விடைத்தாள்கள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறது என்றும் தெரிவித்தார்.

சித்தியெய்திய மாணர்வர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே  பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த வருடம் 800,000 சிறார்களுக்கு பாதணிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருடம் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் பிற்போடப்பட்டமையால் பிள்ளைகளுக்கு வயதாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பரீட்சை கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: