மார்ச்முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021

கொரோனா தடுப்பூசி மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் துஷித்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் 9 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுவதுடன் பின்பு மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளின் விநியோகம் ஜனவரி 29 ஆமத் திகதி ஆரம்பமானது. எனினும் ஒருவருக்கு இருமுறை தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளதால் தற்போதுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 250 ஆயிரம் பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: