மீனவர் சுட்டுக் கொலைதொடர்பான விசாரணை அறிக்கை இரு வாரங்களில் – கடற்படை!

Thursday, March 9th, 2017

கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினர் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில், கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் சில மீனவர்கள் காயமடைந்ததாகவும், இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எதுஎவ்வாறு இருப்பினும், கடற்படை இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இந்த சம்பவத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் தொடர்பில்லை என, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த இலங்கை வௌிவிவகார அமைச்சு, இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தது.

Related posts: