நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 11th, 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையையும் தவிருங்கள் - நா...
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் - நல...
வடக்கு நோக்கி நகரும் சூரியன் - இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்ம...