வடக்கு நோக்கி நகரும் சூரியன் – இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Friday, April 5th, 2024

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று (05) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில், சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமஹாராம போன்ற இடங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல், சபரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும், பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: