வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வரி அதிகரிப்பு!

Thursday, November 9th, 2017

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து குரல்மாற்று பதிவுடன் ஒளிப்பரப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படம் வர்த்தக நிகழ்ச்சிகாக அறவிடப்படும் வரி உடனடியாக நடைமுறைக்கு வரும் படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த வணிக அமைப்புகள் மற்றும் தாயாரிப்பாளர்களினால் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 30 நிமிடம் அல்லது அதற்கு குறைவான காலப்பகுதிக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு குரல் பதிவு செய்யப்படும் ஆகக்கூடிய 4 பிரிவுகளை கொண்ட தொலைக்காட்சி நாடகம் அல்லது திரைப்படத்திற்காக நாளாந்தம் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சி நேரத்திற்கு தற்போது அறிவிடப்படும் கட்டணம் 90ஆயிரம் ரூபா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு இலங்கை சப்பிருதாயம் , இலங்கை அடையாளம் மற்றும் நெறிமுறைகள் கண்காணிக்கப்பட்டு, இலங்கை காலாச்சாரம் , கலைத்துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கலைத்துறையினரினால் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கமைவாக தொலைகாட்சி மற்றும் திரைப்பரத்திற்காக தற்போது அறிவிடப்படும் கட்டணத்திற்காக 2006 ஆம் ஆண்டு இல 11 கீழ் நிதி சட்டத்தில்; இது தொடர்பாக வெளியிடப்பட்ட 3 வர்த்தமானி அறிவிப்புக்கள் நேற்று நள்ளிரவு முதல் இரத்து செய்யப்படுவதுடன் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் புதிய கட்டண தொடர்பான வர்த்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: