மாணவி வித்யா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
Friday, December 9th, 2016
கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
யாழ்பாணம் புங்குடுதீவில், மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
காணியற்றோருக்கு காணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை நள்ளிரவில் அதிரிக்க முடியாது - பொதுப் பயன்பாடுக...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!
|
|
|


