காணியற்றோருக்கு காணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Thursday, November 10th, 2016

யாழ். நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுள் 220 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு காணிகள் தேவையாக உள்ளதாகவும் இதற்கு அரச காணிகள் இல்லாமையால் இவர்களுக்கென தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ளனர். இவர்களுள் 682 குடும்பங்கள் தமது சொந்த இடங்களை இழந்தவர்களாவர். இவர்களுள் 462 குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஏனைய 220 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவே காணிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தனியார் காணிகள் கொள்வனவிற்காக 88 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

43f103b76656b6c07613a343040ac4e0_XL

Related posts: