மாகாணங்களின் அபிவிருத்திக்கு உலகவங்கி நிதியுதவி!

உலக வங்கியின் பன்னாட்டு அபிவிருத்திச் சங்கம் 134 அதிகார சபைகளின் அபிவிருத்தி வேலைகளுக்கு 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் 137 அதிகார சபைகளினூடாக இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்தக்கடன் தொகைக்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் பணிமனையில் கைச்சாத்திடப்பட்டது.
நிதி அமைச்சின் செயலர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஆகிய இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். உள்நாட்டு அதிகார சபைகளை வலுப்படுத்தவும் அவற்றின் செயற்திறனை அதிகரிக்கவும் அபிவிருத்தி வேலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு.....
உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி நிறுத்தம் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் விளக்கம்!
44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை - கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச...
|
|