யாழில் 200 மில்லியன் நிதியில் உப்பு உற்பத்தி!

Tuesday, April 9th, 2019

யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது.

தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் இந்த உப்பள உற்பத்தி நிறுவனத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக 100 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட யுத்தத்தின் போது வடமாகணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்த பின்னர் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அண்மையில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: