மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்து!.

Thursday, November 30th, 2023

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மலையகத்திற்கான 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு தனி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய வீட்டுத் திட்டத்திற்கு அப்பால், இலங்கையின் 25 மாவட்டங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2400 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இந்தியா  காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டன...
பயங்கரவாதத்தினை ஒழித்தோம் எனக் கூறும் அரசாங்கத்திற்கு  ஏன் போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இ...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...