மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி – ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

மருந்துக் கொள்வனவு தொடர்பான டெண்டர் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகளே உரிய குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

மிகக்குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்யக்கூடிய நிலை இருந்தும், அதிக விலைக்கு கொள்வனவு செய்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக புபுது ஜயகொட குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மருந்தை 0.15 டொலருக்கு வாங்கலாம் என்றும், ஆனால் ஒரு மருந்தை 10.03 டொலருக்கு வாங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் சுமார் 10 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் புபுது ஜயகொட குறிப்பிட்டுள்ளார். இது இலங்கை பணத்தில் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: