உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமதி!

Friday, March 12th, 2021

கைத்தறி நெசவு உற்பத்திகள் மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட வேறு உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்பதாக பற்றிக், கைத்தறி ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் கொள்கைக்கமைய வெளிநாடுகளில் காட்சி அறைகளை அமைத்து குறித்த நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் சர்வதேச ரீதியாக வலுவான சந்தை வலையமைப்பை உருவாக்கி இலங்கை உற்பத்திகளை விரிவாக்கம் செய்வதற்காக முன்னணி நிறுவனமொன்றை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக லங்கா சலுசல கம்பனியின் 100% வீதம் பங்குகளுடன் கூடிய கம்பனியாக புதிய கம்பனியொன்றை தாபிப்பதற்கும், குறித்த கம்பனியால் நியமிக்கப்படும் வெளிநாட்டு முகவர்கள் மற்றும் காட்சி. அறைகள் மூலம் பத்திக் தயாரிப்புக்கள், கைத்தறி நெசவு உற்பத்திகள் மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட வேறு உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: