மரக்கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிப்பு!

அரச மரக்கூட்டுத்தானத்தின் புதிய தலைவராக அனுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
அரசதலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாக அரசதலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரையும் கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது செயலரையும் சேவையிலிருந்து நீக்குமாறு அரச தலைவர் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
Related posts:
பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்!
மாணவி வித்தியா கொலை: மாவை எம்.பி யிடம் விசாரணை!
அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் - மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - .இராஜ...
|
|