பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்!

Saturday, November 5th, 2016

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகளை வெளியிடாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுவதானது  பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாடாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் எட்டு மாதங்கள் கழிந்த நிலையிலும் பரீட்சைத் திணைக்களம் வெளியிடவில்லை.இந்த நிலையில், பரீட்சைத் திணைக்களம் அசமந்தப் போக்கில் இருந்து வருவதாகவும், பரீட்சை எழுதிய பயிற்சி ஆசிரியர்கள் தமது சேவை நிரந்தரமாக்கப்படாத நிலையில், சம்பளம் அதிகரிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கின்றார்கள்.

சகல பரீட்சைப் பெறுபேறுகளையும் உரிய காலத்திற்குள் வெளியிடும் பரீட்சைத் திணைக்களம் நாடு முழுவதிலுமுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்று வந்த ஆயிரம் பேருக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட ஆசிரியர்களது இறுதியாண்டுப் பரீட்சைப் பெறுபேறுகளை உரிய காலப் பகுதியில் வெளியிடாமல் இழுத்தடித்துக் காலம் கடத்தி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனவும், மிகக் குறைந்தளவு சம்பளம் பெறும் ஆசிரியர் உதவியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ex_2333a

Related posts: