மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் !

Friday, June 21st, 2024

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: