முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!

Monday, December 3rd, 2018

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் இதர பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் ஒரு துறையாக இந்த முச்சக்கர வண்டி சங்கம் அமைந்துள்ளது. ஆனாலும் அச்சங்கத்தினர் நாளாந்தம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டவண்ணமே காணப்படுகின்றனர்.

குறிப்பாக அதிகளவான முச்சக்கரவண்டிகளை அதன் உரிமையாளர்கள் லீஷிங் முறைமூலமே கொள்வனவு செய்து தமது வாழ்வாதார தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அதன் மாதாந்த கட்டுப்பணங்களை கட்டுவதில் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை நாம் அறிவோம்.

அந்தவகையில் கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த போது இச்சங்கங்களுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை உருவாக்கி அவர்களது வாழ்வாதாரங்களை முன்னேற்றியிருந்தோம்.

ஆனாலும் அதன்பின்னரான சிறிது காலத்தில் நாட்டில் உருவான நல்லாட்சி காலத்தில் மக்களது தேவைகள் மறுக்கப்பட்ட தனி நபர்களது சுயநலன்கள் ஒவ்வொரு இடங்களிலும் தலைவிரித்தாடியது.

இதனால் சாதாரண மக்கள் முதல்கொண்டு தத்தமது சுயதொழிலை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டுவந்திருந்தனர்.

அனால் தற்போது ஒரு குறிப்பட்ட காலத்தில் மறுபடியும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு  அமைச்சு அதிகாரம் கிடைத்துள்ளதால் கிடைத்துள்ள ஒவ்வொரு மணித்துளியையும் எமது மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த நாம் அயராது உழைத்துவருகின்றோம்.

அதன் பிரகாரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் வீட்டு திட்டங்கள் வாழ்வாதார உதவிகள் சுயதொழிலுக்கான உதவிகள் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

அந்தவகையில் பொருளாதார ரீதியில் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவரும் இந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்து தரப்படும் என்றார்.

viber image6 viber image3 1

Related posts: