இம்முறை 5 ஏக்கருக்கே உரமானியம் – முல்லை மாவட்ட கமநல சேவை உதவிப் பணிப்பாளர்!

Tuesday, October 4th, 2016

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் 16ஆயிரத்து 889 ஹெக்ரெயரில் நெல் செய்கை செய்யப்பட்வுள்ளதாகவும்  விவசாயி ஒருவருக்கு 5 ஏக்கருக்கே இந்த முறை மானிய உரம் வழங்கப்படும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

2016 – 2017 ஆம் ஆண்டுக்கான கலபோக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகள் தங்கள் ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அது குறித்து கருத்து தெரிவித்தபோதே உதவிப் பணிப்பாளர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு மட்டுமே உர மானியம் வழங்கப்பட்வுள்ளது. அதற்கு மேலதிகமாக நெற்செய்கையில் ஈடுபடுவர்களுக்கு உர மானியம் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உறுதியான முடிவு இன்னும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. மேட்டுக்காணிகளில் உப உணவுப் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் இந்தமுறை மானியம் வழங்கப்படவுள்ளது.

மேட்டுக்காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் நில பரப்பின் விவரங்கள்  தற்போது கமநல சேவை நிலையங்களால் திரட்டப்படுகின்றன. பசளை மானிய பதிவுகளை 30ஆம் திகதிக்கு முன்னர் தரும்படி கேட்கப்பட்டிருந்தது. தற்போது சிறிதுகால நீடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 10ஆம் திகதிவரை பசளை மானிய பதிவுகளை மேற்கொள்ள முடியும். காலபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குறிப்பிட்ட திகதிக்குள் விதைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அந்தந்த கமநல சேவை நிலையங்களில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன – என்றார்.

agriculture_main

Related posts: