அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பதவி விலகிய பேராசிரியர்!

Saturday, June 27th, 2020

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார்.

அத்துடன் தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் முடிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்ற அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

எனவே பெரும்பாலும் இந்த வெற்றிடத்திற்கான புதிய நியமனம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:


சட்ட நடவடிக்கை எடுக்கம்வரை பகிஷ்கரிப்பு – யாழ் பல்கலை கலைப்பீட விரிவுரையாளர்கள் தீர்மானம்!
சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு...
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையற்றது - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ...