கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்பு!

Friday, December 17th, 2021

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டதிலேயே இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் நடமுறைச் சிக்கல்களினால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாக நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்திருந்தார்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டகளஸ் தேவானந்தா, அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து சட்டப் பிரதியை  முழுமையாக வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதேச சபைகளின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருந்தமை

000

Related posts: