கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, June 22nd, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்து 98 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 41 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஐயாயிரத்து 898 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து 287 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 633 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 31 ஆயிரத்து 952 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 24 இலட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை எட்டு இலட்சத்து 29 ஆயிரத்து 116 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பிரதமரின் தலைமையில் தேசிய மூலோபாய விருது வழங்கும் விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது!
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் அத...