மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் ஏற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை 6 இலட்சம் பேரில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலச்சத்து 11 ஆயிரம் பேர் உள்ளனர்

எனவே, 3 இலச்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ளது இருந்தபோதும் நாளை 25 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது. இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிரிகள் பிரிவு காரியாலயங்களில் ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: