மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த முடியும் – உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவிப்பு!
Thursday, July 15th, 2021
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது கொரோனா அறிகுறியாக கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள்.
எனவே, அவர்கள் தொடர்பில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவிக்...
|
|
|


