வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!
Tuesday, November 1st, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மின்சார தேவையினை பூர்த்திசெய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 25 ஆயிரம் குடும்பங்கள் அளவில் மின்சார தேவை நிலவுவதாகவும் இதனை விரைவாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த மின்சாரத் தேவைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் 11 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் தேவைக்காக விண்ணப்பித்திருந்தனர். பொல்லேபெத்த ஆசிவாசிகளின் தலைவரின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்படுவதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் மின்சார கோரிக்கை முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:
பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந...
அதிஉயர் டெங்கு அபாயம்– யாழ்ப்பாணம் உள்ளட்ட 15 சுகாதார அதிகார பிரிவுகள் அடையாளம்!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!
|
|
|
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம் - அமைச்சர் காஞ்ச...
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...
நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகல் – 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிய...


