மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதிநவீன் நோயாளர் காவுவண்டி விபத்து!
Sunday, September 6th, 2020
மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதநவீனரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே இன்று அதிகாலை1.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை ஆதார வைத்தியசாலை நோக்கி இருவருடன் பயணித்த குறித்த வண்டி, யாழ் – பருத்தித்துறை பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகில் இருந்த கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த வருடம் சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரக(BMW)அம்புலன்ஸ் வண்டியே விபத்தில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!
தமிழக மீனவர்கள் மீண்டும் அடாவடி - வடமராட்சி கடற்றொழிலாளர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்ட...
தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்த...
|
|
|


