மத்திய வங்கியின் சுற்றுநிருபங்களை மீறி செயற்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்து முறைப்பாடு வழங்குங்கள் – பிரதி ஆளுநர் திருமதி மஹிந்த சிறிவர்த்தன அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்று நிருபங்கள் பின்பற்றாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும் என இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திருமதி மஹிந்த சிறிவர்த்தன கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடலின் போது முதலீட்டாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் பங்குபற்றிய சிறு முதலீட்டாளர் ஒருவர் தான் வங்கியொன்றில் தனது தொழில் முயற்சின் நிமித்தம் வங்கியில் கடன் பெற்ற நிலையில் மத்திய வங்கி குறித்த கடனை கட்டுவதற்கு சிலகாலம் தவணை வழங்கப்பட்ட நிலையில் வங்கிகள் அதனை உரிய முறையில் அதனை பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதன்போது பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் என்ற சுற்றுநருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும்.

அவர்கள் அவ்வாறு செய்யப்படவில்லையாயின் இலங்கை மத்திய வங்கியின் பொதுமக்கள் தொடர்பு இலக்கமான 0112398542 மற்றும் dred@cbsl.lk இணையதள முகவரியின் ஊடாக தங்களின் முறைப்பாடுகளை முன்வைத்தால் அதற்குரிய பரிகாரம் காணப்படும் என என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது - வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரி...
புலிகளின் சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்தமை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு - பாதுகாப்பு இராஜாங...

பாடசாலை வளாகத்திற்குள் இணைபாடவிதான செயற்பாடுகளுக்கு தடை - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொ...
தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு - ஒரு நாள் சேவையூடான விநியோகிப்...