தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு – ஒரு நாள் சேவையூடான விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2 ஆயிரம் அறவிடவும் நடவடிக்கை!

Tuesday, November 1st, 2022

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையின் நகலை வழங்குவதற்காக அறிவிடப்படும் கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்திற்கு மேலதிகமாக 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: