மற்றுமொரு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Friday, May 12th, 2017

முதலீட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சார்பில் சீன அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கட்டமைப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முதலீட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் சீன வணிக அமைச்சுக்கும், இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் இடையில் 2016-04-07ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு உடன்படிக்கையொன்றில் நடுத்தர மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டப் பொழிப்பில் இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts: