மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்?

மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அரச நிதிச் சபையின் உறுப்பினர்களான நிஹால் பொன்சேகா மற்றும் கிரிசாந்த பெரேரா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலைமையின் கீழ் பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு பொருத்தமானவரா என ஆராய்ந்து நியமிக்கப்பட்டதாகவும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுனருக்கு தெரிவித்துள்ளார்.நிதிச் சபை உறுப்பினர்களும் மத்திய வங்கியின் ஆளுனருடன் பதவி விலக விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பறவை மோதி விபத்து: 146 பயணிகளுடன் தரையிங்கிய விமானம்!
மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!
மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் - தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்ல...
|
|