ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு – 24 ஆம் திகதியன்று உரையாற்றவும் சந்தர்ப்பம்!

Sunday, September 11th, 2022

செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.

இந்த அமர்வில் அரச தலைவர் அல்லது அரசாங்க தலைவர் பங்கேற்கும்போது அவர்களின் உரைக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் அவர்களின் உரைகளுக்கு முன்னுரிமை தினங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மாதம் உரையாற்றுவோர் பட்டியலில் வெளியிட்டப்பட்டபோது அதில் இலங்கையின் அரச தலைவருக்கு செப்டம்பர் 21ஆம் திகதியன்று உரைக்கான திகதி ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த திகதி 24ஆம் திகதிக்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் ஆகியோருக்கு உரைகள் வழங்கப்பட்ட பின்னரே நாடுகள் சார்பிலான அமைச்சர்களின் உரைகள் இடம்பெறும் என்ற அடிப்படையில் இலங்கையின் உரை, 24ஆம் திகதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தடவை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீனாவின் ஜனாதிபதி ஜி.ஜின்பிங், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்இ சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் மியன்மார் இராணுவ தலைமையாளர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: