தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் சட்டம் – ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017

பயிர்ச்செய்யப்படாத அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச்செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 வறட்சியினால் அழிவுக்குள்ளான பயிர்நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடத்தை நேற்று (09) பிற்பகல் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப் படவுள்ளதுடன், பயிர்ச்செய்கைக்கு உட்படுத்பபடாமலுள்ள அனைத்து தனியார் காணிகளிலிலும் கட்டாயமாக பயிர்ச்செய்னை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி

குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே இந்த அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.கல்வி, சுகாதாரம், சமூக நலன்பேணல் ஆகிய அனைத்து துறைகளிலும் நாட்டில் சமமான அபிவிருத்தியை முன்னெடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அபிவிருத்தியின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவம் கூறினார்.

அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பிரச்சினைகளைப் பார்த்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாக செயல்பட்டுவருவதாக தெரிவித்த இதில் எந்த கட்சி என்று கேட்கும் கொள்கை தம்மிடம் கிடையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கட்சி, நிறம் என்ற வேறுபாடின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மக்கள் தனக்கு வாக்களித்தனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலன்னறுவையில் மட்டுமன்றி நாட்டின் அனைவருக்கும் அரசியல் பேதங்களின்றி அபிவிருத்தியின் நன்மைகளை கிடைக்கச்செய்வதாகவும் தெரிவித்தார்.

Related posts: