மதுபான நிலையங்களின் அனுமதியை நிறுத்த வேண்டும் – சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!
 Thursday, January 24th, 2019
        
                    Thursday, January 24th, 2019
            போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்று அறிவித்திருக்கும் மைத்திரிபால சிறிசேன மதுபான விற்பனை நிலையங்களுக்குப் புதிதாக அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்திலும் மருத்துவமனை, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றுக்கு அருகிலும் மதுபான விற்பனை நிலையம் அமைக்க அனுமதித்திருப்பது மதுப் பாவனையை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
வளர்ந்து வரும் கிராமமான ஓமந்தையிலும் மதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை நிலையங்கள் பெருகுவது ஒரு சில தனிநபர்கள் பணம் சேர்க்க உதவுமே தவிர, நாட்டுக்கோ, மக்களுக்கோ நன்மை பயக்காது.
பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிகளை ரத்துச் செய்ய வேண்டும் என்றுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        