மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை இல்லை!

Saturday, April 29th, 2017

நாட்டில் மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படக் கூடாது என நிதி விவகாரங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற செயற்குழுநிதி அமைச்சிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்குழுவின் தலைவராக எம்.ஏ.சுமந்திரன் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கலால் வரிச் சட்டத்தின் கீழ் 23 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கான தகுதியை பூர்த்தி செய்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காணப்படுவதாகவும் இதில் 23 நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எந்தவொரு நிறுவனத்திற்கும் வரிச் சலுகை வழங்கப்படக் கூடாது என சுமந்திரன் தலைமையிலான நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.

Related posts: