சிறைக்காவல்துறை பிரிவு ஸ்தாபிப்பு!
Friday, August 17th, 2018
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைக்காவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அண்மையில் கலைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை விடயங்களில் இந்த பிரிவை அதிகாரமிக்க உத்தியோகபூர்வ காவற்துறை பிரிவாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை காவற்துறை புலனாய்வு பிரிவு 2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : புனவர்வாழ்வளிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிப்பு - நீதி அமைச...
கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கும் தொடர்பு இல்லை -...
அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை – அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


