கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : புனவர்வாழ்வளிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிப்பு – நீதி அமைச்சர் !

Friday, September 4th, 2020

சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அவர்களை புனவர்வாழ்வளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நீதி அமைச்சரின் ஆலோசனையின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிஅமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் நீதி அமைச்சின் சட்ட ஆலோசகர்கள் இந்த குழுவின் ஆலாசகர்களாக செயற்படுபவர்.

இதில் சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விளக்குமறியல் கைதிகளின் எண்ணிக்கை தற்போது பாரியளவில் அதிகரித்திப்பதால், நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு அவர்களை புனவர்வாழ்வளிப்பது தொடர்பாக இந்த சந்திப்பின்போது பிரதானமாக கலந்துந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: